குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : தெரிந்துசெயல்வகை.
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
Translation:
Expenditure, return, and profit of the deed
In time to come; weigh these- than to the
act proceed.
act proceed.
Explanation:
Let a man reflect on what will be lost,
what will be acquired and (from these) what will be his ultimate gain, and
(then, let him) act.
what will be acquired and (from these) what will be his ultimate gain, and
(then, let him) act.
கலைஞர் உரை:
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.
[ads-post]
மு.வ உரை:
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.
மணக்குடவர் உரை:
வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும் அது செய்து முடித்தாலுளதாகும் பொருளுமாய்நின்று அப்பொருளினாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினைசெய்ய வேண்டும்.
பரிமேலழகர் உரை:
அழிவதூஉம் – வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும், ஆவதூஉம் – அழிந்தால் பின் ஆவதனையும், ஆகி வழி பயக்கும் ஊதியமும் – ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும், சூழ்ந்து செயல் – சீர் தூக்கி உறுவதாயின் செய்க. (உறுவதாவது – நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்து வருதல் . அழிவது இன்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை ‘ஊதியம்‘ என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை தெரிந்து செய்க என்பதாம்.)




