HomeUncategorizedThirukural 498 of 1330 - திருக்குறள் 498 of 1330

Thirukural 498 of 1330 – திருக்குறள் 498 of 1330

Thirukural
498 of 1330 –
திருக்குறள் 498 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இடனறிதல்.
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
Translation:
If lord of army vast the safe retreat
assail
Of him whose host is small, his mightiest
efforts fail.
Explanation:
The power of one who has a large army will
perish, if he goes into ground where only a small army can act.
கலைஞர் உரை:
சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.

[ads-post]
மு. உரை:
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.
சாலமன் பாப்பையா உரை:
பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.
மணக்குடவர் உரை:
சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே பெரும்படையை யுடையவன் பொருந்துவனாயின் மன மிகுதி கெடும். இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.
பரிமேலழகர் உரை:
உறுபடையான்பெரும்படையுடைய அரசன், சிறுபடையான் செல் இடம் சேரின்ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின், ஊக்கம் அழிந்து விடும்அவனால் தன் பெருமை அழியும். (‘செல் இடம்அவனுக்குச் செல்லும் இடம். ‘அழிந்துவிடும்என்பதுஎழுந்திருக்கும்என்றாற்போல் ஒரு சொல் ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப்பெருமை நோக்கி , இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்குசென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாக,அப்பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments