HomeUncategorizedThirukural 496 of 1330 - திருக்குறள் 496 of 1330

Thirukural 496 of 1330 – திருக்குறள் 496 of 1330

Thirukural
496 of 1330 –
திருக்குறள் 496 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இடனறிதல்.
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
Translation:
The lofty car, with mighty wheel, sails not
o’er watery main,
The boat that skims the sea, runs not on
earth’s hard plain.
Explanation:
Wide chariots, with mighty wheels, will not
run on the ocean; neither will ships that the traverse ocean, move on the
earth.
கலைஞர் உரை:
ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் தேர் கடலிலே ஓடாது கப்பல் நிலத்தில் போகாது என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.

[ads-post]
மு. உரை:
வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.
சாலமன் பாப்பையா உரை:
வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா.
மணக்குடவர் உரை:
கால் வலிய நெடுந்தேர் கடலின்கண் ஓடாது: கடலின் கண் ஓடும் நாவாயும் நிலத்தின்கண் ஓடாது. இஃது இடத்திற்காங் கருவி பண்ணவேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
கால் வல் நெடுந்தேர் கடல் ஓடாநிலத்தின்கண் ஓடும் கால்வலிய நெடிய தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா, கடல் ஓடும் நாவாயும் நிலத்து ஓடாஇனி அக்கடலின்கண் ஓடும் நாவாய்கள் தாமும் நிலத்தின் கண் ஓடமாட்டா. (‘கடல் ஓடாஎன்ற மறுதலை அடையான்நிலத்து ஓடும்என்பது வருவிக்கப்பட்டது. ‘கால்வல் நெடுந்தேர்என்பது ஓடுதற்கு ஏற்ற காலும் பெருமையும் உடையவாயினும் என்பதுபட நின்றது. ‘மேற்சென்றார் பகைவர் இடங்களை அறிந்து அவற்றிற்கு ஏற்ற கருவிகளான் வினை செய்கஎன்பது தோன்ற நின்றமையின், இதுவும் மேலை அலங்காரம் ஆயிற்று.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments