HomeUncategorizedThirukural 557 of 1330 - திருக்குறள் 557 of 1330

Thirukural 557 of 1330 – திருக்குறள் 557 of 1330

Thirukural
557 of 1330 –
திருக்குறள் 557 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கொடுங்கோன்மை.
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
Translation:
As lack of rain to thirsty lands beneath,
Is lack of grace in kings to all that
breathe.
Explanation:
As is the world without rain, so live a
people whose king is without kindness.
கலைஞர் உரை:
மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.

[ads-post]
மு. உரை:
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.
சாலமன் பாப்பையா உரை:
மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.
மணக்குடவர் உரை:
உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது; அத்தன்மைத்து, அரசன் அருளிலனாதால் அவன் கீழ் வாழும் மக்கட்கு. இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுமழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும், அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்குஅவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு. (சிறப்புப்பற்றிதுளிஎன்பது மழைமேல் நின்றது. ‘உயிர்என்பது குடிகள்மேல் நின்றது.மேல்வான் நோக்கி வாழும்என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments