HomeUncategorizedThirukural 631 of 1330 - திருக்குறள் 631 of 1330

Thirukural 631 of 1330 – திருக்குறள் 631 of 1330

Thirukural
631 of 1330 –
திருக்குறள் 631 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : அமைச்சு.
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
Translation:
A minister is he who grasps, with wisdom
large,
Means, time, work’s mode, and functions
rare he must discharge.
Explanation:
The minister is one who can make an
excellent choice of means, time, manner of execution, and the difficult
undertaking (itself).
கலைஞர் உரை:
உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.

[ads-post]
மு. உரை:
செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.
மணக்குடவர் உரை:
செய்தற்கு அரியவினையும், அதற்காங்கருவியும், அதற்காங்காலமும், அதனையிடையூறு படாமற் செய்து முடித்தலுமாகிய இந்நான்கும் மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான். செய்தற்கு அரியவினையாவது மறுமண்டலங்கோடல்; கருவியாவது யானைகுதிரை முதலிய படை: காலமாவது நீரும் நிழலுமுள்ள காலம்; செய்தலாவது மடியின்றிச் செய்தல்.
பரிமேலழகர் உரை:
கருவியும்வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும்; காலமும்அதற்கு ஏற்ற காலமும்; செய்கையும்அது செய்யுமாறும்; செய்யும் அருவினையும்அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்; மாண்டது அமைச்சுவாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான். (கருவிகள்தானையும் பொருளும், காலம்அது தொடங்குங் காலம், ‘செய்கைஎனவே, அது தொடங்கும் உபாயமும், இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவது என்பார், ‘அருவினைஎன்றார். இவை ஐந்தினையும் வடநூலார் மந்திரத்திற்கு அங்கம் என்ப.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments