HomeUncategorizedThirukural 645 of 1330 - திருக்குறள் 645 of 1330

Thirukural 645 of 1330 – திருக்குறள் 645 of 1330

Thirukural
645 of 1330 –
திருக்குறள் 645 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : சொல்வன்மை.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
Translation:
Speak out your speech, when once ’tis past
dispute
That none can utter speech that shall your
speech refute.
Explanation:
Deliver your speech, after assuring
yourself that no counter speech can defeat your own.
கலைஞர் உரை:
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

[ads-post]
மு. உரை:
வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக.
மணக்குடவர் உரை:
சொல்லைச் சொல்லுக; தான் சொல்ல நினைத்த அச்சொல்லைப் பிறிதொரு சொல்லாய் வெல்லுஞ் சொல் இல்லை யாதலை யறிந்து.
பரிமேலழகர் உரை:
சொல்லைப் பிறிது ஓர்சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்துதாம் சொல்லக்கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுகபின் அச்சொல்லைச் சொல்லுக. (பிறிதோர் சொல்மாற்றாரது மறுதலைச்சொல். வெல்லுதல்குணங்களான் மிகுதல், அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம். இனிப்பிறிதோர் சொல்‘, ‘வெல்லும் சொல்எனச் செவ்வெண்ணாக்கி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உளவாகாமல் சொல்லுக என்று உரைப்பாரும் உளர். இது சொற்பொருட் பின்வரும் நிலை.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments