HomeUncategorizedThirukural 652 of 1330 - திருக்குறள் 652 of 1330

Thirukural 652 of 1330 – திருக்குறள் 652 of 1330

Thirukural
652 of 1330 –
திருக்குறள் 652 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்தூய்மை.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
Translation:
From action evermore thyself restrain
Of glory and of good that yields no gain.
Explanation:
Ministers should at all times avoid acts
which, in addition to fame, yield no benefit (for the future).
கலைஞர் உரை:
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

[ads-post]
மு. உரை:
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.
மணக்குடவர் உரை:
எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும், புகழொடு நன்மை
பயவாத வினையை என்று மென்றது செயலற்ற காலமுமென்றது
.
பரிமேலழகர் உரை:
புகழொடு நன்றி பயவா வினைதம் அரசனுக்கு
இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை
; என்றும் ஒருவுதல்
லேண்டும்
அமைச்சர்க்கு
எக்காலத்தும் ஒழிதல் வேண்டும்
. (பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், ‘என்றும்என்றார். ‘வேண்டும்என்பது ஈண்டு
இன்றியமையாது என்னும் பொருட்டு
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments