HomeUncategorizedThirukural 653 of 1330 - திருக்குறள் 653 of 1330

Thirukural 653 of 1330 – திருக்குறள் 653 of 1330

Thirukural
653 of 1330 –
திருக்குறள் 653 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்தூய்மை.
ஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
Translation:
Who tell themselves that nobler things
shall yet be won
All deeds that dim the light of glory must
they shun.
Explanation:
Those who say, “we will become
(better)” should avoid the performance of acts that would destroy (their
fame).

கலைஞர் உரை:
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.

[ads-post]
மு. உரை:
மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மணக்குடவர் உரை:
தமக்குப் புகழ்கெடவரும் வினையைச்
செய்தலையும் ஆக்கங் கருதுவார் தவிர்க
. இது முன்புள்ள புகழ் கெடவரும் வினையையும் தவிர்க
என்றது
.
பரிமேலழகர் உரை:
ஆதும் என்னும் அவர்மேலாகக்கடவோம்
என்று கருதுவார்
; ஒளி
மாழ்கும் வினை செய் ஓஒதல் வேண்டும்
தம் ஒளி கெடுதற்குக் காரணமாய வினையைச் செய்தலைத்
தவிர்க
. (‘ஓஒதல்வேண்டும்என்பது ஒரு சொல்
நீர்மைத்து
. ஓவுதல்
என்பது குறைந்து நின்றது
.
ஒளிதாம் உள
காலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதல்
. ‘செய்என்னும் முதனிலைத் தொழிற்பெயர் மாற்றப்பட்டது. அன்றிச் செய்வினை
என வினைத் தொகையாக்கியவழிப் பொருளின்மை அறிக
. ஒளிகெட வருவது ஆக்கம் அன்று என்பதாம்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments