HomeUncategorizedThirukural 672 of 1330 - திருக்குறள் 672 of 1330

Thirukural 672 of 1330 – திருக்குறள் 672 of 1330

Thirukural
672 of 1330 –
திருக்குறள் 672 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைசெயல்வகை.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
Translation:
Slumber when sleepy work’s in hand: beware
Thou slumber not when action calls for
sleepless care!.

Explanation:
Sleep over such (actions) as may be slept
over; (but) never over such as may not be slept over.
கலைஞர் உரை:
நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.

[ads-post]
மு. உரை:
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.
மணக்குடவர் உரை:
தாழ்த்துச் செய்ய வேண்டும்
வினையைத் தாழ்த்துச் செய்க
:
தாழாமற் செய்யவேண்டும் வினையைத் தாழாமற் செய்க.
பரிமேலழகர் உரை:
தூங்கிச் செயற்பால தூங்குகநீட்டித்துச்
செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட்டிக்க
; தூங்காது செய்யும் வினை தூங்கற்கநீட்டியாது
செய்யும் வினைகளுள் நீட்டியாது ஒழிக
. (இரு வழியும் இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்கப்பட்டது. இருவகை வினைகளும்
வலியானும் காலத்தானும் அறியப்படும்
. மாறிச்செய்யின், அவை வாயா என்பது கருத்து. மேல்தூங்காமைஎன்றார்(குறள் 383), ஈண்டதனைப்
பகுத்துக் கூறினார்
. இவை
இரண்டு பாட்டானும் பொதுவகையால் வினை செய்யும் திறம் கூறப்பட்டது
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments