HomeUncategorizedThirukural 680 of 1330 - திருக்குறள் 680 of 1330

Thirukural 680 of 1330 – திருக்குறள் 680 of 1330

Thirukural
680 of 1330 –
திருக்குறள் 680 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைசெயல்வகை.
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
Translation:
The men of lesser realm, fearing the
people’s inward dread,
Accepting granted terms, to mightier ruler
bow the head.

Explanation:
Ministers of small states, afraid of their
people being frightened, will yield to and acknowledge their superior foes, if
the latter offer them a chance of reconciliation.
கலைஞர் உரை:
தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.

[ads-post]
மு. உரை:
வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை:
சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.
மணக்குடவர் உரை:
உறையும் இடம் சிறியார் தமது இடம்
நடுங்குதற்கு அஞ்சித் தமது குறைதீரப் பெறின் தம்மின் பெரியாரைத் தாழ்ந்து நட்பாகக்
கொள்வர்
. இது
சிறையானால் இவ்வாறு செய்தல் வேண்டுமென்றது
.
பரிமேலழகர் உரை:
உறை சிறியார்ஆளும் இடஞ்
சிறியராய அமைச்சர்
; உள்நடுங்கல்
அஞ்சி
தம்மின்
வலியரால் எதிர்ந்தவழித் தம்பகுதி நடுங்கலை அஞ்சி
; குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வார்அந்நிலைக்கு
வேண்டுவதாய சந்து கூடுமாயின்
, அவரைத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்வர். (இடம்: நாடும் அரணும். அவற்றது சிறுமை
ஆள்வார்மேல் ஏற்றப்பட்டது
.
மெலியாரோடு சந்திக்கு வலியார் இயைதல் அரிதாகலின், ‘பெறின்என்றார். அடியிலே
மெலியாராயினார் தம் பகுதியும் அஞ்சி நீங்கின் முதலொடும் கெடுவராகலின்
, அது வாராமல்
சிறிதுகொடுத்தும் சந்தியை ஏற்றுக்கொள்க என்பதாம்
. பணிதல் மானமுடையார்க்குக் கருத்து
அன்மையின்
, ‘கொள்வர்என உலகியலால்
கூறினார்
, இவை
மூன்று பாட்டானும் மெலியான் செய்யும் திறம் கூறப்பட்டது
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments