HomeUncategorizedThirukural 688 of 1330 - திருக்குறள் 688 of 1330

Thirukural 688 of 1330 – திருக்குறள் 688 of 1330

Thirukural
688 of 1330 –
திருக்குறள் 688 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : தூது.
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
Translation:
Integrity, resources, soul determined,
truthfulness.
Who rightly speaks his message must these
marks possess.
Explanation:
The qualifications of him who faithfully
delivers his (sovereign’s) message are purity, the support (of foreign
ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid)
three.
கலைஞர் உரை:
துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

[ads-post]
மு. உரை:
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.
மணக்குடவர் உரை:
தூய்மையுடைமையும், சுற்றமுடைமையும், ஒரு பொருளை
யாராய்ந்து துணிதலுடைமையும்
,
இம்மூன்றின்கண்ணும் மெய்யுடைமையும் தூதற்கு இயல்பாம். தூய்மைமெய்யும் மனமும்
தூயனாதல்
.
பரிமேலழகர் உரை:
வழி உரைப்பான் பண்புதன் அரசன்
வார்த்தையை அவன் சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்வானது இலக்கணமாவன
; தூய்மைபொருள்
காமங்களால் தூயனாதலும்
; துணைமைதமக்கு
அவரமைச்சர் துணையாந் தன்மையும்
; துணிவுடைமைதுணிதலுடைமையும்; இம்மூன்றன் வாய்மைஇம்மூன்றோடு கூடிய மெய்ம்மையும் என இவை. (பொருள் காமங்கள்
பற்றி வேறுபடக் கூறாமைப் பொருட்டுத் தூய்மையும்
, தன் அரசனுக்கு உயர்ச்சி கூறிய வழிஎம்மனோர்க்கு
அஃது இயல்பு
எனக்கூறி, அவர் வெகுளி நீக்குதற்
பொருட்டுத் துணைமையும்
, ‘இது
சொல்லின் இவர் ஏதஞ்செய்வர்

என்று ஒழியாமைப் பொருட்டுத் துணிவுடைமையும் , யாவரானும் தேறப்படுதற் பொருட்டு
மெய்ம்மையும் வேண்டப்பட்டன
.
இன்ஒடுவின்
பொருட்கண் வந்தது
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments