குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : தூது.
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.
Translation:
His faltering lips must utter no unworthy
thing,
thing,
Who stands, with steady eye, to speak the
mandates of his king.
mandates of his king.
Explanation:
He alone is fit to communicate (his
sovereign’s) reply, who possesses the firmness not to utter even inadvertently
what may reflect discredit (on the latter).
sovereign’s) reply, who possesses the firmness not to utter even inadvertently
what may reflect discredit (on the latter).
கலைஞர் உரை:
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
[ads-post]
மு.வ உரை:
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.
சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.
மணக்குடவர் உரை:
தன்னரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப்
பகை யரசர்க்குச் சொல்லுமவன் தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத
அஞ்சாமையையுடைய தூதனாவான்.
பகை யரசர்க்குச் சொல்லுமவன் தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத
அஞ்சாமையையுடைய தூதனாவான்.
பரிமேலழகர் உரை:
விடு மாற்றம் வேந்தர்க்கு
உரைப்பான் – தன்னரசன்
சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றசர்க்குச் சென்று சொல்ல உரியான்; வடுமாற்றம்
வாய்சோரா வன்கணவன் – தனக்கு
வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத
திண்மையை உடையான். (தாழ்வு
சாதி தருமமன்மையின், ‘வடு‘ என்றார். ‘வாய்சோரா‘ எனக் காரியம்
காரணத்துள் அடக்கப்பட்டது.)