HomeUncategorizedThirukural 697 of 1330 - திருக்குறள் 697 of 1330

Thirukural 697 of 1330 – திருக்குறள் 697 of 1330

Thirukural
697 of 1330 –
திருக்குறள் 697 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : மன்னரைச் சேர்ந்தொழுதல்.
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.
Translation:
Speak pleasant things, but never utter idle
word;
Not though by monarch’s ears with pleasure
heard.
Explanation:
Ministers should (always) give agreeable
advice but on no occasion recommend useless actions, though requested (to do
so).
கலைஞர் உரை:
விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.

[ads-post]
மு. உரை:
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.
மணக்குடவர் உரை:
எப்போதும் வேந்தனால்
விரும்பப்படுவனவற்றைச் சொல்லித் தமக்குப் பயன்படாதவற்றைக் கேட்டாலும் சொல்லாது
விடுக
. சொல்லாது
விடலாவது தூதனை அரசர்க்குப் படை எவ்வளவு உண்டென்று பகையரசன் வினவினால் நீ
அறியாததொன்றோ வென்று அளவு கூறாமை
.
பரிமேலழகர் உரை:
வேட்பன சொல்லிபயன்
பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி
; எஞ்ஞான்றும் வினை
இல கேட்பினும் சொல்லாவிடல்

எஞ்ஞான்றும் பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக. (‘வினையிலஎனவும், ‘கேட்பினும்எனவும் வந்த
சொற்களான்
, அவற்றின்
மறுதலைச் சொற்கள் வருவிக்கப்பட்டன
. வினையான் வருதலின்வினைஎன்றும் வறுமைக்காலமும் அடங்கஎஞ்ஞான்றும்என்றும் கூறினார். சொல்லுவனவும்
சொல்லாதனவும் வகுத்துக் கூறியவாறு
. இவை நான்கு பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments