HomeUncategorizedThirukural 698 of 1330 - திருக்குறள் 698 of 1330

Thirukural 698 of 1330 – திருக்குறள் 698 of 1330

Thirukural
698 of 1330 –
திருக்குறள் 698 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : மன்னரைச் சேர்ந்தொழுதல்.
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.
Translation:
Say not, ‘He’s young, my kinsman,’
despising thus your king;
But reverence the glory kingly state doth
bring.
Explanation:
Ministers should behave in accordance with
the (Divine) light in the person of kings and not despise them saying, “He
is our junior (in age) and connected with our family!”.
கலைஞர் உரை:
எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

[ads-post]
மு. உரை:
(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக.
மணக்குடவர் உரை:
இவர் நமக்கு இளையரென்றும்
இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும்
.
பரிமேலழகர் உரை:
இளையர் இன முறையர் என்று இகழார்இவர் எம்மின்
இளையர் என்றும்
, எமக்கு
இன்ன முறையினையுயடையர் என்றும் அரசரை அவமதியாது
; நின்ற ஒளியொடு ஒழுகப்படும்அவர் மாட்டு
நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்
. (ஒளி, உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த
ஒழுகலாவது
, அவர்
கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல்
. அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி
இகழ்வராயின்
, தாமும்
போக்கப்படுவர் என்பது கருத்து
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments