HomeUncategorizedThirukural 707 of 1330 - திருக்குறள் 707 of 1330

Thirukural 707 of 1330 – திருக்குறள் 707 of 1330

Thirukural
707 of 1330 –
திருக்குறள் 707 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : குறிப்பறிதல்.
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.
Translation:
Than speaking countenance hath aught more
prescient skill?
Rejoice or burn with rage, ’tis the first
herald still!.
Explanation:
Is there anything so full of knowledge as
the face ? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or
vexed.
கலைஞர் உரை:
உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.

[ads-post]
மு. உரை:
ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ?.
மணக்குடவர் உரை:
முகம்போல முதிர்ந்த அறிவுடையது பிறிதுண்டோ? ஒருவனை உவப்பினும் வெறுப்பினும் தான் முற்பட்டுக் காட்டும். குறிப்பறியுமாறு என்னை யென்றார்க்கு, இது முகம் அறிவிக்குமென்றது.
பரிமேலழகர் உரை:
உவப்பினும் காயினும் தான் முந்துறும்உயிர் ஒருவனை உவத்தலானும் காய்தலானும் உறின், தான் அறிந்த அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும் ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோமுகம் போல அறிவுமிக்கது பிறிது உண்டோ? இல்லை. (‘உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான இயன்ற முகத்திற்கு இல்லைஎன்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும், காய்வுறின் கருகியும் வரலான், ‘உண்டுஎன மறுப்பார் போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments