HomeUncategorizedThirukural 744 of 1330 - திருக்குறள் 744 of 1330

Thirukural 744 of 1330 – திருக்குறள் 744 of 1330

Thirukural
744 of 1330 –
திருக்குறள் 744 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரணியல். அதிகாரம் : அரண்.
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.
Translation:
A fort must need but slight defence, yet
ample be,
Defying all the foeman’s energy.
Explanation:
A fort is that which has an extensive space
within, but only small places to be guarded, and such as can destroy the
courage of besieging foes.
கலைஞர் உரை:
உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்.

[ads-post]
மு. உரை:
காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.
மணக்குடவர் உரை:
காக்கவேண்டும் இடம் சிறிதாய், மதிலகம் பெரிய இடத்தையுடைத்தாய், மதிலையுற்ற பகைவரது மிகுதியைக் கெடுப்பது அரணாவது. சிறு காவலாவது ஒருபக்கம் மலையாயினும் நீராயினும் உடைத்தாதல்.
பரிமேலழகர் உரை:
சிறுகாப்பின் பேர் இடத்தது ஆகிகாக்க வேண்டும் இடம் சிறிதாய் அகன்ற இடத்தை உடைத்தாய்; உறு பகை ஊக்கம் அழிப்பது அரண்தன்னை வந்து முற்றிய பகைவரது மன எழுச்சியைக் கெடுப்பதே அரணாவது. (வாயிலும் வழியும் ஒழிந்த இடங்கள் மலை, காடு, நீர்நிலை என்றிவற்றுள் ஏற்பன உடைத்தாதல் பற்றிசிறுகாப்பின்என்றும்,அகத்தோர் நலிவின்றியிருத்தல் பற்றி, ‘பேரிடத்தது ஆகிஎன்றும், தன் வலி நோக்கிஇது பொழுதே அழித்தும்என்று வரும் பகைவர் வநது கண்டால், அவ்வூக்கமொழிதல் பற்றி, ‘ஊக்கம் அழிப்பதுஎன்றும் கூறினார்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments