HomeUncategorizedThirukural 759 of 1330 - திருக்குறள் 759 of 1330

Thirukural 759 of 1330 – திருக்குறள் 759 of 1330

Thirukural
759 of 1330 –
திருக்குறள் 759 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : கூழியல். அதிகாரம் : பொருள்செயல்வகை.
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
Translation:
Make money! Foeman’s insolence o’ergrown
To lop away no keener steel is known.
Explanation:
Accumulate wealth; it will destroy the
arrogance of (your) foes; there is no weapon sharper than it.
கலைஞர் உரை:
பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது.

[ads-post]
மு. உரை:
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.
மணக்குடவர் உரை:
பொருளையுண்டாக்குக; பகைவரது பெருமிதத்தை யறுக்கலாங் கருவி அப்பொருள்போலக் கூரியது பிறிது இல்லை. இது பொருளீட்டல் வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
பொருளைச் செய்கதமக்கொன்றுண்டாகக் கருதுவார் பொருளை உண்டாக்குக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகுதம் பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதனிற் கூரியது இல்அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை. (‘அதுவாம்‘ ‘அதற்குஎன்பன அவாய் நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே பெரும்படையும் நட்பும் உடையராவர். ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், ‘செறுநர் செருக்கு அறுக்கும் எஃகுஎன்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப்பொருளை அறுக்க மாட்டாமையின்அதனிற் கூரியது இல்என்றும் கூறினார்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments