HomeUncategorizedThirukural 857 of 1330 - திருக்குறள் 857 of 1330

Thirukural 857 of 1330 – திருக்குறள் 857 of 1330

Thirukural
857 of 1330 –
திருக்குறள் 857 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : இகல்.
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.
Translation:
The very truth that greatness gives their
eyes can never see,
Who only know to work men woe, fulfilled of
enmity.
Explanation:
Those whose judgement brings misery through
its connection with hatred cannot understand the triumphant nature of truth.
கலைஞர் உரை:
பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.

[ads-post]
மு. உரை:
இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.
மணக்குடவர் உரை:
மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார், மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார். இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது.
பரிமேலழகர் உரை:
இகல் மேவல் இன்னா அறிவினவர்இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினையுடையார்; மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார்வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார். (இன்னா அறிவுதமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. வெற்றிவழிநின்றார்க்கு உளதாவது. காணப்படும் பயத்ததாகலின், ‘மெய்ந்நூல்எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார். இவை இரண்டு பாட்டானும்இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments