HomeUncategorizedThirukural 863 of 1330 - திருக்குறள் 863 of 1330

Thirukural 863 of 1330 – திருக்குறள் 863 of 1330

Thirukural
863 of 1330 –
திருக்குறள் 863 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பகைமாட்சி.
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
Translation:
A craven thing! knows nought, accords with
none, gives nought away;
To wrath of any foe he falls an easy prey.
Explanation:
In the estimation of foes miserably weak is
he, who is timid, ignorant, unsociable and niggardly.
கலைஞர் உரை:
அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.

[ads-post]
மு. உரை:
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
சாலமன் பாப்பையா உரை:
பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.
மணக்குடவர் உரை:
அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சுவான், பகைவனது வலிமை அறியான், மதியிலன், ஈயமாட்டான்: இப்பெற்றிப் பட்டவன் பகைவர்க்கு மிகவும் எளியன். .இஃது இவை நான்கு முடையவன் தோற்கு மென்றது.
பரிமேலழகர் உரை:
அஞ்சும்ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாநிற்கும்; அறியான்அறியவேண்டுமவற்றை அறியான்; அமைவு இலன்பிறரோடு பொருத்தம் இலன்; ஈகலான்இவற்றின் மேலும் யாவர் மாட்டும் இவறன்மாலையன்; பகைக்குத் தஞ்சம் எளியன்இப்பெற்றியான் பகைவர்க்கு மிக எளியன். (‘தஞ்சம்‘, ‘எளியன்ஒருபொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியுமாகலின்தஞ்சம்‘, ‘எளியன்என்றார்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments