HomeUncategorizedThirukural 864 of 1330 - திருக்குறள் 864 of 1330

Thirukural 864 of 1330 – திருக்குறள் 864 of 1330

Thirukural
864 of 1330 –
திருக்குறள் 864 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பகைமாட்சி.
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
Translation:
His wrath still blazes, every secret told;
each day
This man’s in every place to every foe an
easy prey.
Explanation:
He who neither refrains from anger nor
keeps his secrets will at all times and in all places be easily conquered by all.
கலைஞர் உரை:
சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்.

[ads-post]
மு. உரை:
ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.
சாலமன் பாப்பையா உரை:
கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.
மணக்குடவர் உரை:
வெகுளியின் நின்று நீங்கானாய் நிறையுடைமை இலனாயின் அவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளிது. இஃது இவையிரண்டு முடையவ னெல்லார்க்குந் தோற்கு மென்றது.
பரிமேலழகர் உரை:
வெகுளி நீங்கான்ஒருவன் வெகுளியின் நீங்கான்; நிறை இலன்அதுவேயன்றித் தான் நிறையுடையன் அல்லன்; எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிதுஅவன்மேற்சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது. (நிறைமறை பிறரறியாமை. வெகுள்தல் மாலையன் ஆகலானும், மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனிஇனிதுஎன்று பாடம் ஓதிஅவன் பகைமை இனிதுஎன்று உரைப்பாரும் உளர்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments