HomeUncategorizedThirukural 960 of 1330 - திருக்குறள் 960 of 1330

Thirukural 960 of 1330 – திருக்குறள் 960 of 1330

Thirukural
960 of 1330 –
திருக்குறள் 960 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : குடிமை.
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்
வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.
Translation:
Who seek for good the grace of virtuous
shame must know;
Who seek for noble name to all must
reverence show.

Explanation:
He who desires a good name must desire
modesty; and he who desires (the continuance of) a family greatness must be
submissive to all.
கலைஞர் உரை:
தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.

[ads-post]
மு. உரை:
ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.
மணக்குடவர் உரை:
ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக: அவ்வண்ணமே குலத்தை விரும்புவாராயின் யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக. இது பணிந்தொழுக வேண்டு மென்றது.
பரிமேலழகர் உரை:
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும்ஒருவன் தனக்கு நலனுடைமையை வேண்டுவானாயின், தான் நாணுடையன் ஆதலை வேண்டுக; குலம் வேண்டின் யாரக்கும் பணிவு வேண்டுககுலனுடைமையை வேண்டுவானாயின், பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக. (நலம்புகழ் புண்ணியங்கள். ‘வேண்டும்என்பது. விதிப் பொருட்டாய் நின்றது. ‘வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்‘ (தொல்.சொல்.கிளவி.33) என்புழிப்போல, ‘அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய் என்றிவர்எல்லாரும் அடங்கயாரக்கும்என்றார். பணிவுஇருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments