HomeUncategorizedThirukural 961 of 1330 - திருக்குறள் 961 of 1330

Thirukural 961 of 1330 – திருக்குறள் 961 of 1330

Thirukural
961 of 1330 –
திருக்குறள் 961 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : மானம்.
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
Translation:
Though linked to splendours man no
otherwise may gain,
Reject each act that may thine honour’s
clearness stain.
Explanation:
Actions that would degrade (one’s) family
should not be done; though they may be so important that not doing them would
end in death.
கலைஞர் உரை:
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.

[ads-post]
மு. உரை:
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.
மணக்குடவர் உரை:
இன்றியமையாத சிறப்புடையனவாயினும் தமது தன்மை குறையவரும் பொருளையும் இன்பத்தையும் விடுக. இது பொருளும் இன்பமும் மிகினும் தன்மை குறைவன செய்யற்க வென்றது.
பரிமேலழகர் உரை:
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவேயெனினும்; குன்ற வருப விடல்தம் குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக. (அமையாமைஇறத்தல். ‘குடிப்பிறப்புஎன்பது அதிகார முறைமையான் வந்தது. ‘இறப்பவரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்கஎன்னும் வடநுல் முறையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments