Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 3241 - 3270 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3241 – 3270 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3241 – 3270 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வேழமுடி மன்னர் வெற்றிகொண் டாண்டிருந்தார்
வெட்டாத படையை வெட்டி விருதுபெற்று
அட்டாளத் தேசம் அடக்கியர சாண்டிருந்தார்
இப்படியே சான்றோர் இராச்சியத்தை யாண்டிருக்க
அப்படியே சீமை அவர்க்குள்ளே யாக்கிவைத்துத்
தர்மமுடன் பூமி தானாண் டிருக்கையிலே
வர்மம் வந்தஞாயம் வகுக்கக்கே ளொண்ணுதலே

கலியன் பிறப்பு

சீரங்க மானதிலே சீரங்க நாதருந்தான்
பாரெங்கு மெய்க்கப் பள்ளிகொண் டிருக்கையிலே
நாட்டுக்குக் கேடு நாட்பிடித்த செய்திதன்னை
கூட்டுக் கிளியே கூர்மையுடனே கேளு
முன்னே குறோணி முடிந்ததுண்ட மாறதிலே
அன்னேகே ளஞ்சுதுண்டம் அவனி தனிலேபிறந்து
ஆதி தனைநினைத்து ஆளாம லவ்வுயிர்கள்
நீதிகெட்ட மோச நீசனைப்போல் தானாகி
முப்பிறவி யோடாறும் முதலோனைப் போற்றாமல்
அப்பிறவி யாறும் அழித்ததின்மே லாயிழையே
குருமுனிவ னான கூர்மையுள்ள மாமுனிவன்
அருமுனிவ னான ஆதிமுனி யைநோக்கி
சிவனெனவே போற்றிச் சொல்லுவான் மாமுனிவன்
தவமே தவப்பொருளே தாண்டவசங் காரவனே
முன்னே பிறந்த குறோணிதனை மூவிரண் டாக வுடல்பிளந்து
தன்னே வுயிரோ டஞ்சுசெய்து சுவாமி யுனைநினை யாத்ததினால்
வன்னத் திருமால் கொலையடக்கி வந்தார் சடல மிழந்துகுண்டம்
இன்னம் பிறப்பொன் றுண்டல்லவோ இறந்த குறோணி யவன்தனக்கே
வாசமுள்ள நேசா மற்றொப்பில் லாதவனே
ஈசனே நானுமொன்று இயம்புகிறேன் கேளுமையா
குறோணி யவனுடலைக் கூர்மையுட னேபிளந்து
சுறோணித மாயன் தொல்புவியில் விட்டெறிய
அஞ்சுதர முயிரு அவனிதனி லேபிறந்து

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments