Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 3661 - 3690 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3661 – 3690 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3661 – 3690 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

எவ்வொருவ ரால்வதைக்க ஏலாது நீசனையும்

கலியரசன் சத்தியம்

என்று அகத்தீசர் இப்படியே தான்கூற
அன்றுஸ்ரீ ரங்கர் ஆண்டியுரு தானாகித்
தலைவிரித்துக் கந்தை சற்றே கலைபூண்டு
சிலையில்லா வெங்கையால் சென்றாரே நீசனிடம்
நீச னிடத்தில் நெடுமால்தான் முன்னேகி
வாசமுடன் வார்த்தை வழுத்தினா ரம்மானை
ஈச னிடத்தில் இறைஞ்சிவரம் பெற்றதிலே
தேச இரப்பனுக்குச் சிறுகா யென்றுரைத்தார்
தாரா தேபோனால் சாபமிடு வேனுனக்குப்
பாராய்நீ யென்று பகட்டினா ரெம்பெருமாள்
அப்போது நீசன் ஆண்டி தனைப்பார்த்து
இப்போது போடா இரப்பனோ டேதுசண்டை
மாயன் வரவேணும் வலுப்பார்த்து விட்டிடுவேன்
பேய னுடனெனக்குப் பேச்சென்ன நீபோடா
என்று அந்தநீசன் இவ்வளமை கூறிடவே
அன்று பரதேசி அவனோடங் கேதுரைப்பார்
பிச்சைக் காரன்தனக்குப் பெலமில்லை யென்றோநீ
அச்சம தில்லாமல் அடமா யிதுவுரைத்தாய்
பண்டாரந் தன்பலமும் பழிநீசா வுன்பலமும்
சண்டையிட்டுப் பார்த்தால் தான்தெரியும் மாநீசா
என்று பண்டாரம் இதுவுரைக்க அந்நீசன்
குன்று கரத்தெடுத்த கோபால ரோடுரைப்பான்
ஆள்படை களில்லாமல் ஆயுதங்க ளில்லாமல்
வேழ்படை களில்லை வெட்டவா ளிங்குமில்லை
தடியில்லை சக்கரமும் தானில்லை உன்கையிலே
முடிவிரித்துக் கந்தை உடுத்தவனோ டுயுத்தமிட்டால்
ஆண்மையில்லை யென்றனக்கு ஆயிழைமா ரேசுவரே
தாண்மைமொழி பேசாதே தலைவிரித்துப் பேயாநீ
மூவர் முதலாய் முப்பத்து முக்கோடித்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments