Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 8191 - 8220 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8191 – 8220 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8191 – 8220 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தேசபர சோதனைக்கு தெச்சணத் திலேயனுப்பி
வாசமுட னிங்கே வருவோ மெனவுரைத்தார்
அப்போது ஈசர் முதலானசங்கத் தோரர்களெல்லாம்
இப்போது நாங்கள் ஏகுவோ மும்மோடே
என்றுரைக்கச் சங்கம் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
ஒன்றுமறி யாகாதே உற்றவுப தேசமதைத்
தேவன் திருமுதலாய்த் தெய்வகன்னி மார்முதலாய்
மூவர் முதலாய் உள்ளறியா விஞ்சையது
உவரியில் நடக்கிறது உங்களுக்கு தெரியாதே
நடந்தா லறிவார் நடக்குமுன் னேயொருவர்
அடக்க மறியாத அருவிஞ்சை யீதல்லவோ
அந்தவகை யானதினால் எல்லோரு மென்கூட
வந்தால் சரியல்லவே வரவேண்டாமென்றால் நோவீர்களே
என்றுரைக்க நாதன் எல்லோரு மேதுரைப்பார்
ஒன்றுமறி யாதிடினும் உம்முடனே வாறொமென்றார்
உடனே திருமால் உற்றலட்சு மிநினைவால்
நடைமேல் நடையெனவே நல்லசெந்தூர் தானோக்கி
உன்னி சிவமும் உற்றசத்தி நல்மாதும்
வன்னத் தேவர்முதலாய் மாமுனிவர் கின்னரரும்
சங்கமு மெங்குளோரும் சகலகலை வாணர்களும்
மங்களக் காரர்களும் மாதுசத்தி யைச்சூழ்ந்து
மரைவீசும் மாதர்களும் மாதுசக்தியைசூழ்ந்து
திரைதிரையாய்க் கன்னியர்கள் சேவித்து ஏத்திவர
ஏழு வாச்சியமும் இமலோக ரேற்றிவர
தொழுவார் சிலபேர் தொம்தொ மெனஆடிவர
நாராயணர் வைகுண்டராய் நல்வாரியில் பிறந்து
காரணமாய் தெச்சணத்தில் கலிசோதனைப் பார்த்து
கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச்
சலிவில்லாத் தர்மபதி சத்திமக்க ளையாள
வாறாரைய்யா நாதன் வைகுண்ட மும்மூர்த்தி

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments