Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 8461 - 8490 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8461 – 8490 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8461 – 8490 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இருந்த பதியும்விட்டு ஏற்றவொரு காதம்விட்டு
வருந்த நருளோடே வழிகொண்டா ரன்போரே
கூடங் குளமும்விட்டுக் குளிர்ந்தசுக்குப் பாரும்விட்டுத்
தோடவழி யாறுங்கண்டு சூறாவழிக் காடும்விட்டு
நடந்து வொருவனத்தில் நல்லதண்ணீ ராவிகண்டு
கொடர்ந்த பலகாரம் கொண்டுதண்ணீர் தான்குடித்து
தகையாறிக் கொண்டு தானிருக்கும் வேளையிலே
வகையான நல்ல வாய்த்தமகா விட்டிணுவும்
பிறவி முதலில் பிறந்த சடமதுவும்
திறவி முதலோன் தெளிந்துமிகக் கொண்டாடி
எதிரே ஆள்விட்டு இங்கழைக்க வேணுமென்று
அருகே தானின்ற ஆதி முனியான
நல்ல முனிவரையும் நாரா யணரழைத்து
வல்லவர்தாம் நீங்கள் வாரு மென அழைத்து
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த முனிமாரே
நேருங்க ளோடு நிகழ்த்துகிறே னோர்வசனம்
நானே மித்த நல்லவுயி ரானதிங்கே
தானே வருகுதுகாண் எந்தன் தவத்தாலே
எதிரேபோய் நீங்கள் இங்கழைத்து வாருமென்று
பதியேறும் பெருமாள் பகர்ந்து முனியயச்சார்
அயச்ச முனிமார் அவ்வாயு போல்விரைவாய்ப்
பயபட்ச முடனே பகர்ந்த இருமுனியும்
எந்த வழியாய் இவர்கள்வரு வாரெனவே
அந்தந்த வழிக்கு ஆலோட்டம் பார்த்துவந்தார்
வந்து ஒருவழியில் வரவேகண் டம்முனிவர்
சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
கண்டு குவித்துக் கனக முனிமார்கள்
வண்டுசுற்று மார்பனுட வாய்த்தகரம் ரண்டதையும்
முனியிருபேர் தோளில் உயர்த்தி மிகவேந்தி
துணிவுடனே மாமுனிவர் தோளின்மே லேயிருத்திப்

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments