சீவக சிந்தாமணி 1121 – 1125 of 3145 பாடல்கள்
1121. ஆய் களிற்று அசனி வேகம் அதன் மருப்பு ஊசி ஆக
சீவகன் அகன்ற மார்பம் ஓலையாத் திசைகள் கேட்பக்
காய்பவன் கள்வர் என்ன எழுதுவித்திடுவல் இன்னே
நீ பரிவு ஒழிந்து போய் நின் அகம் புகு நினையல் என்றான்
விளக்கவுரை :
1122. நஞ்சு அனான் உரைப்பக் கேட்டே நாய்கனும் நடுங்கி உள்ளம்
வெஞ் சின வேழம் உண்ட விளங்கனி போன்று நீங்கி
எஞ்சினன் போல நின்றான் ஏத்த அருந் தவத்தின் மிக்க
வஞ்சம் இல் கொள்கையான் சொல் அமிர்தினால் வற்புற்றானே
விளக்கவுரை :
[ads-post]
1123. மின் இலங்கு எஃகினானைப் பெறுகலான் தந்தை மீண்டு
தன் இலம் குறுகலோடும் தாய் அழுது அரற்று கின்றாள்
என் நிலை ஐயற்கு என்ன யாவதும் கவல வேண்டா
பொன் நலம் கொடியனாய் ஓர் பொருள் உரை கேள் இது என்றான்
விளக்கவுரை :
1124. மது மடை திறந்து தீம் தேன் வார் தரு கோதை நீ முன்
செது மகப் பலவும் பெற்றுச் சிந்தை கூர் மனத்தை ஆகி
இது மகவு அழியின் வாழேன் இறப்பல் யான் என்னும் ஆங்கண்
கதும் எனக் கடவுள் தோன்றிக் கடை முகம் குறுக வந்தான்
விளக்கவுரை :
1125. கறவை காண் கன்றின் வெஃகிக் கண்டு அடி பணிந்து காமர்
நறவு அயா உயிர்க்கும் மாலை நாற்றிய இடத்துள் ஏற்றி
அறவியாற்கு ஆறும் மூன்றும் அமைந்த நால் அமிர்தம் ஏந்தப்
பறவை தாது உண்ட வண்ணம் பட்டினிப் பரிவு தீர்ந்தான்
விளக்கவுரை :




