சீவக சிந்தாமணி 1126 – 1130 of 3145 பாடல்கள்
1126. ஆய் மணிப் பவளத் திண்ணை அரும் பெறல் கரகத்து அங்கண்
தூய் மணி வாசம் நல் நீர் துளங்கு பொன் கலத்துள் ஏற்று
வேய் மணித் தோளி நிற்ப விழுத்தவன் நியமம் முற்றி
வாய் மணி முறுவல் தோன்ற வந்தனை விதியின் செய்தேன்
விளக்கவுரை :
1127. ஆறு எலாம் கடலுள் வைகும் அருந் தவத்து இறைவன் நூலுள்
வேறு எலாப் பொருளும் வைகும் விழுத் தவ அறிதி நீயே
ஊறு இலா உணர்வின் நோக்கி உரைமதி எவன்கொல் மக்கள்
பேறு இலாள் அல்லள் பெற்ற உயிர் சென்று பிறக்கும் என்றேன்
விளக்கவுரை :
[ads-post]
1128. வம்பு அவிழ் கோதை தந்த வான் துவர்க் காயை வீழ்த்து ஓர்
செம் பழுக் காயை வாங்கித் திருநிலத்து எடுத்துக் கொண்டு ஆங்கு
அம்பு அழ நீண்ட வாள் கண் அலமரும் அணி செய் அம்பூங்
கொம்பு அடு நுசுப்பினாய்க்குத் தந்தனென் பேணிக் கொண்டாய்
விளக்கவுரை :
1129. பெற்ற அந் நிமித்தத்தானும் பிறந்த சொல் வகையினானும்
அற்றம் இல் மணியை அம் கைக் கொண்டு அவர் கண்டு காட்டக்
கற்பகம் காமவல்லி அனைய நீர் கேண்மின் என்று
முற்றுபு கனிந்த சொல்லான் முனிவரன் மொழியும் அன்றே
விளக்கவுரை :
1130. ஒன்றும் நீர் கவலல் வேண்டா உலகு எலாம் ஆளும் சீர்த்திப்
பொன் திகழ் உருவினான் ஓர் புண்ணியன் பெறுதிர் என்ன
நின்ற நீ உவந்து நீங்க நிகழ் பொருள் எனக்குச் செப்பிப்
பின்றையும் நிகழ்வது உண்டு பேசுவல் கேள் இது என்றான்
விளக்கவுரை :




