சீவக சிந்தாமணி 1131 – 1135 of 3145 பாடல்கள்
1131. நிலவு உறழ் பூணினானை நெடு நகர் இரங்கக் கையாத்து
அலபல செய்து கொல்வான் அருளிலான் கொண்ட போழ்தில்
குலவிய புகழினானைக் கொண்டு போம் இயக்கன் அஞ்சல்
சில பகல் கழிந்து காண்டி சிந்தி ஈது என்று சொன்னான்
விளக்கவுரை :
1132. வசை அற நிறைந்த கற்பின் மாலையும் மாமிதானும்
தசை அற உருகி வெந்து தம் உயிர் நீங்கும் ஆங்கண்
நொசி தவன் சொற்கள் என்றும் நோன் புணை தழுவி நெஞ்சில்
கசிவு எனும் கடலை நீந்திக் கரை எனும் காலை கண்டார்
விளக்கவுரை :
[ads-post]
1133. திருக்குழல் மகளிர் நையச் சீவக சாமி திண் தோள்
வரிக் கச்சில் பிணிக்கப் பட்டான் மன்னனால் என்னக் கேட்டே
தருக்கு உடை வேழம் வாளார் ஞாட்பினுள் தகைமை சான்ற
மருப்புடன் இழந்தது ஒத்தார் மன் உயிர்த் தோழன் மாரே
விளக்கவுரை :
1134. நட்டவற்கு உற்ற கேட்டே பது முகன் நக்கு மற்று ஓர்
குட்டியைத் தின்னலாமே கோள் புலி புறத்தது ஆகக்
கட்டியங் காரன் என்னும் கமுதை நம் புலியைப் பாய
ஒட்டி இஃது உணரலாமே உரைவல்லை அறிக என்றான்
விளக்கவுரை :
1135. சிலையொடு செல்வன் நின்றால் தேவரும் வணக்கல் ஆற்றார்
முலை உடைத் தாயொடு எண்ணித் தந்தை இக் கொடுமை செய்தான்
கலை வல்லீர் இன்னும் கேண்மின் இன்னது என்று உரைக்கும் ஆங்கண்
விரைவொடு சென்ற ஒற்றாள் விளைந்தவா பேசுகின்றான்
விளக்கவுரை :




