சீவக சிந்தாமணி 1136 – 1140 of 3145 பாடல்கள்
1136. இட்டி வேல் குந்தம் கூர்வாள் இரும் சிலை இருப்புச் சுற்றார்
நெட்டிலை சூலம் வெய்ய முளைத்தண்டு நெருங்க ஏந்தி
எட்டு எலாத் திசையும் ஈண்டி எழாயிரத்து இரட்டி மள்ளர்
கட்டு அழல் கதிரை ஊர்கோள் வளைத்தவா வளைத்துக் கொண்டார்
விளக்கவுரை :
1138. சூழ்கழல் மள்ளர் பாறச் சூழ்ச்சியின் தந்தை புல்லி
வீழ்தரு கண்ணள் தம்மோய் விளங்கு தோள் பிணிப்ப மற்று என்
தோழரை வடுச் செய்திட்டேன் என்று தான் துளங்கி நின்றான்
ஊழ் திரைப் பாம்பு சேர்ந்த ஒளி மிகு பருதி ஒத்தான்
விளக்கவுரை :
[ads-post]
1139. ஒற்றன் வந்து உரைப்பக் கேட்டே ஒத்ததோ என்சொல் என்னாச்
சுற்றினார் முகத்தை நோக்கிச் சூழிமால் யானை அன்னான்
உற்ற இவ் இடரைத் தீர்க்கும் உபாயம் நீர் உரைமின் என்றான்
பொன் திரள் குன்றம் போலப் பொலிவு கொண்டு இருந்த தோளான்
விளக்கவுரை :
1140. நிறைத் திங்கள் ஒளியோடு ஒப்பான் புத்திசேன் நினைந்து சொல்லும்
மறைத்து இங்கண் நகரை வல்லே சுடுதும் நாம் சுடுதலோடும்
இறைக் குற்றேல் செய்தல் இன்றி எரியின் வாய் சனங்கள் நீங்கச்
சிறைக் குற்றம் நீங்கச் செற்றான் செகுத்து கொண்டு எழுதும் என்றான்
விளக்கவுரை :




