Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 1981 - 1985 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1981 – 1985 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1981 – 1985 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1981. கட்டில் ஏறிய காமரு காளையும்
மட்டு வாய் அவிழ் மா மலர்க் கோதையும்
விட்டு நீங்குதல் இன்மையின் வீவு இலார்
ஒட்டி ஈர் உடம்பு ஓர் உயிர் ஆயினார்

விளக்கவுரை :

1982. நிலவு வெண் கதிர் நீர்மைய பூந் துகில்
கலவம் கண் புதையாது கனற்றலின்
உலகம் மூன்றும் உறு விலைத்து என்பவே
புலவு வேல் கண்ணினாள் முலைப் போகமே

விளக்கவுரை :

[ads-post]

1983. தேன் அவாம் கமழ் கண்ணியும் தெவ்வர் தம்
ஊன் அவாம் கதிர் வேல் உறு காளையும்
கான் அவாம் கடி நாறும் மென் பள்ளி மேல்
வான் அவாம் வகையால் வைகி னார்களே

விளக்கவுரை :

1984. வெண் மதி நெற்றி தேய்த்து விழுத் தழும்பு இருப்ப நீண்ட
அண்ணல் நல் மாடத்து அங்கண் அகில் புகை அமளி ஏறிப்
பண் அமை மகர வீணை நரம்பு உரீஇப் பாவை பாட
மண் அமை முழவுத் தோளான் மகிழ்ச்சியுள் மயங்கினானே

விளக்கவுரை :

1985. இன்னரிச் சிலம்போடு ஏங்கிக் கிண்கிணி இகலி ஆர்ப்பப்
பொன் அரி மாலை தாழப் பூஞ்சிகை அவிழ்ந்து சோரப்
மின் இரும் கலாபம் வீங்கி மிளர்ந்து கண் இரங்க வெம்பித்
துன் அருங் களி கொள் காமக் கொழுங் கனி சுவைத்து விள்ளான்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments