சீவக சிந்தாமணி 1986 – 1990 of 3145 பாடல்கள்
1986. தொழித்து வண்டு இமிரும் கோதை துணை முலை முள்கப் பூம்பட்டு
அழித்து மட்டு ஒழுகும் தாரான் மணி வள்ளத்து ஆய்ந்த தேறல்
எழில் பொலி மாதர்க்கு ஏந்த இனிதினின் நுகர்ந்து காமக்
கொழித் திரை கடலுள் மூழ்கிக் கோதை கண் துயின்ற அன்றே
விளக்கவுரை :
1987. பாசிலை சுருட்டி மைந்தன் கொடுக்கிய பரந்து மின்னும்
தூசு உலாம் அல்குல் தீண்டத் துயில் கண்கள் விழித்த தோற்றம்
வாச வான் குவளை மெல்ல வாய் விடா நின்றது ஒக்கும்
ஏசுவது ஒன்றும் இல்லா இணை வட முலையி னாட்கே
விளக்கவுரை :
[ads-post]
1988. கங்குல் பால் புகுந்த கள்வன் இவன் எனக் கதுப்பில் தாழ்ந்த
தொங்கலான் முன் கை யாத்துச் சொல்லு நீ வந்தது என்ன
நங்கை யான் பசித்து வந்தேன் எப் பொருள் நயப்பது என்றாட்கு
அம் கலுழ் மேனியாய் நின் அணிநல அமிழ்தம் என்றான்
விளக்கவுரை :
1989. செயிர்த்தவள் சிவந்து நோக்கிச் சீறடி சென்னி சேர்த்தி
அயிர்ப்பது என் பணி செய்வேனுக்கு அருளிற்றுப் பொருள் அது என்ன
உயிர்ப்பதும் ஓம்பி ஒன்றும் உரையலை ஆகி மற்று இப்
பயிர்ப்பு இல் பூம் பள்ளி வைகு பகட்டு எழில் மார்ப என்றாள்
விளக்கவுரை :
1990. உள் இழுது உடைய வெம்பி உற்பல உருவு கொண்ட
வெள்ளியில் புனைந்த கோல விளக்கு ஒளி வெறுவிது ஆக
வள் இதழ்க் கோதை வல்லான் வட்டிகை நுதியின் வாங்கிப்
பள்ளி மேல் எழுதப்பட்ட பாவை போல் ஆயினாளே
விளக்கவுரை :




