Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 1991 - 1995 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1991 – 1995 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1991 – 1995 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1991. மங்கையர் பண்ணிய மருத யாழ் குழல்
நங்கையைப் பிரியும் இந் நம்பி இன்று என
அங்கு அதற்கு இரங்கின ஆரும் பேதுறக்
கங்குல் போய் நாள் கடன் கழிந்தது என்பவே

விளக்கவுரை :

1992. ஏந்து பூங் கோதைகள் திருத்தி ஏர் படச்
சாந்து கொண்டு இள முலை எழுதித் தையல் தன்
காந்தள் அம் முகிழ் விரல் கையினால் பிடித்து
ஆய்ந்து அவட்கு இது சொலும் அலங்கல் வேலினான்

விளக்கவுரை :

[ads-post]

1993. பூவினுள் தாழ் குழல் பொன் செய் ஏந்து அல்குல்
மாவினுள் தாழ் தளிர் மருட்டும் மேனியாய்
காவினுள் தோழரைக் கண்டு போதர்வேன்
ஏவினுள் தாழ் சிலை எறிந்த கோலினே

விளக்கவுரை :

1994. என்று அவன் உரைத்தலும் எழுது கண்மலர்
நின்ற நீர் இடை மணிப் பாவை நீந்தலின்
மன்றல் நாறு அரிவையைத் தெருட்டி மா மணிக்
குன்று அனான் கொடியவள் குழைய ஏகினான்

விளக்கவுரை :

சுரமஞ்சரியார் இலம்பகம்

1995. வாள் இரண்டு மாறு வைத்த போல் மழைக் கண் மாதரார்
நாள் இரண்டு சென்ற என்று நைய மொய் கொள் காவினுள்
தோள் இரண்டும் அன்ன தோழர் தோன்றலைப் புணர்ந்த பின்
தாள் இரண்டும் ஏத்தி நின்று தையல் நாமம் வேண்டினார்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments