சீவக சிந்தாமணி 1996 – 2000 of 3145 பாடல்கள்
1996. பாடு வண்டு இருந்த அன்ன பல் கலை அகல் அல்குல்
வீடு பெற்றவரும் வீழும் வெம் முலை விமலை என்று
ஆடுவான் அணிந்த சீர் அரம்பை அன்ன வாள் நுதல்
ஊடினும் புணர்ந்தது ஒத்து இனியவள் உளாள் அரோ
விளக்கவுரை :
1997. அம்பு ஓர் ஐந்து உடைய காமன் ஐயன் என்ன அந்தணன்
நம்பு நீரர் அல்லர் நல் குரங்கு நீரர் ஆயினும்
தம் குரவர் தாம் கொடுப்பின் நெஞ்சு நேர்ந்து தாழ்வர் தாம்
பொங்கு அரவ அல்குலார் எனப் புகன்று சொல்லினான்
விளக்கவுரை :
[ads-post]
1998. அற்றும் அன்று கன்னி அம் மடந்தைமார் அணி நலம்
முற்றினாரை நீடு வைப்பின் மூள்கும் வந்து பாவமும்
குற்றம் மற்றும் ஆகும் என்று கோதை சூழ்ந்து கூறினார்க்கு
உற்று அடுத்து அயா உயிர்த்து ஒழிதல் யார்க்கும் ஒக்குமே
விளக்கவுரை :
1999. மதுக் குடம் விரிந்தன மாலையாரொடும்
புதுக் கடி பொருந்துதி புக்க ஊர் எலாம்
விதிக் கிடை காணலாம் வீதி மாநகர்
மதிக் கிடை முகத்தி ஓர் மடந்தை ஈண்டையாள்
விளக்கவுரை :
2000. ஆடவர் தனது இடத்து அருகு போகினும்
நாடி மற்று அவர் பெயர் நயந்து கேட்பினும்
வீடுவல் உயிர் என வெகுளும் மற்று அவள்
சேடியர் வழிபடச் செல்லும் செல்வியே
விளக்கவுரை :




