சீவக சிந்தாமணி 2036 – 2040 of 3145 பாடல்கள்
2036. மன்மதன் மணிக் குரல் மருட்டும் என்று மால் கொள்வார்
இன்னது அன்று இயக்கரின் இயக்க வந்தது என்று தம்
பின்னும் முன்னும் நோக்குவார் பேது சால எய்துவார்
கன்னி தன் மனத்து இழைத்த காளை நாமம் வாழ்த்துவார்
விளக்கவுரை :
2037. கொம்பின் ஒத்து ஒதுங்கியும் குழங்கல் மாலை தாங்கியும்
அம்பின் ஒத்த கண்ணினார் அடிக்கலம் அரற்றவும்
நம்பி தந்த கீதமே நயந்து காண ஓடினார்
வெம்பு வேட்கை வேனிலானின் வேறு அலானும் ஆயினான்
விளக்கவுரை :
[ads-post]
2038. தாம மாலை வார் குழல் தடம் கணார்க்கு இடம் கழி
காமன் அன்ன காளை தன் கருத்தொடு ஒத்தது ஆகலான்
மா மலர்த் தெரியலான் மணி மிடற்று இடைக் கிடந்த
சாம கீதம் மற்றும் ஒன்று சாமி நன்கு பாடினான்
விளக்கவுரை :
2039. கள்ள மூப்பின் அந்தணன் கனிந்த கீத வீதியே
வள்ளி வென்ற நுண் இடை மழை மலர்த் தடம் கணார்
புள்ளுவம் மதி மகன் புணர்த்த ஓசை மேல் புகன்று
உள்ளம் வைத்த மா மயில் குழாத்தின் ஓடி எய்தினார்
விளக்கவுரை :
2040. இனிச் சிறிது எழுந்து வீங்கி இட்டிடை கோறும் நாங்கள்
எனக் கொறு கொறுப்ப போலும் இள முலைப் பரவை அல்குல்
கனிப் பொறை மலிந்த காமர் கற்பக மணிக் கொம்பு ஒப்பாள்
பனிப் பிறைப் பூணினான் தன் பாண் வலைச் சென்று பட்டாள்
விளக்கவுரை :




