சீவக சிந்தாமணி 2041 – 2045 of 3145 பாடல்கள்
2041. அடிக்கலம் அரற்ற அல்குல் கலை கலந்து ஒலிப்ப வந்து
முடிப்பது என் பெரிது மூத்தேன் முற்று இழை அரிவை என்ன
வடிக் கணாள் நக்கு நாணித் தோழியை மறைந்து மின்னுக்
கொடிக் குழாத்து இடை ஓர் கோலக் குளிர் மணிக் கொம்பின் நின்றாள்
விளக்கவுரை :
2042. இளையவன் காணின் மன்னோ என் செய்வீர் நீவிர் என்ன
விளை மதுக் கண்ணி மைந்தர் விளிகெனத் தோழி கூற
முளை எயிற்று இவளை யாரும் மொழிந்தனர் இல்லை என்றோ
உளைவது பிறிதும் உண்டோ ஒண் தொடி மாதர்க்கு என்றான்
விளக்கவுரை :
[ads-post]
2043. வாய்ந்த இம் மாதர் சுண்ணம் சீவகன் பழித்த பின்றைக்
காய்ந்தனள் என்று கூறக் காளை மற்று இவட்குத் தீயான்
மாய்ந்தனன் போலும் என்ன மாதரார் ஒருங்கு வாழ்த்தி
ஆய்ந்தனம் ஐயன் உய்ந்தான் அறிந்தனம் அதனை என்றார்
விளக்கவுரை :
2044. கால் உற்ற காம வல்லிக் கொடி எனக் கலங்கி நங்கை
மால் உற்று மயங்க யாங்கள் மடக்கிளி தூது விட்டோம்
சேல் உற்ற நெடுங் கண் செவ்வாய்த் தத்தை தன் செல்வம் கண்டே
பால் உற்ற பவளச் செவ்வாய்த் தத்தையால் பரிவு தீர்ந்தேம்
விளக்கவுரை :
2045. அன்பு ஒட்டி எமக்கு ஓர் கீதம் பாடுமின் அடித்தியாரும்
முன் பட்டது ஒழிந்து நுங்கள் முகவியர் முனிவு தீர்ந்தார்
பொன் தெட்டேம் யாமும் நும்மைப் போகொட்டோம் பாடல்கேளாது
என் பட்டு விடினும் என்றார் இலங்கு பூங் கொம்பொடு ஒப்பார்
விளக்கவுரை :




