Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 2046 - 2050 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2046 – 2050 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2046 – 2050 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2046. பாடுதும் பாவை பொற்பே பற்றி மற்று எமக்கு நல்கின்
ஆடு அமைத் தோளினீர் அஃது ஒட்டுமேல் கேள்மின் என்ன
நாடி யார் பேயைக் காண்பார் நங்கைகாள் இதுவும் ஆமே
ஆடுவது ஒன்றும் அன்று இவ் ஆண் மகன் உரைப்பது என்றார்

விளக்கவுரை :

2047. பட்டு உலாய்க் கிடந்த செம் பொன் பவளமோடு இமைக்கும் அல்குல்
ஒட்டினாள் அதனை ஓராது உலம் பொரு தோளினானும்
பட்ட வாள் நுதலினாய்க்குப் பாடுவல் காமன் தந்த
தொட்டிமை உடைய வீணைச் செவிச் சுவை அமிர்தம் என்றான்

விளக்கவுரை :

[ads-post]

2048. வயிர வில் உமிழும் பைம் பூண் வனமுலை மகளிர் தம்முள்
உயிர் பெற எழுதப் பட்ட ஓவியப் பாவை ஒப்பாள்
செயிர் இல் வாள் முகத்தை நோக்கித் தேன் பொதிந்து அமுதம் ஊறப்
பயிர் இலா நரம்பில் கீதம் பாடிய தொடங்கினானே

விளக்கவுரை :

2049. தொடித் தோள் வளை நெகிழத் தொய்யில் முலைமேல்
வடிக்கேழ் மலர் நெடுங் கண் வார் புயலும் காலும்
வார் புயலும் காலும் வளை நெகிழும் நம் திறத்தது
ஆர்வம் உறு நெஞ்சம் அழுங்குவிக்கும் மாலை

விளக்கவுரை :

2050. ஐது ஏந்து அகல் அல்குல் ஆவித்து அழல் உயிராக்
கை சோர்ந்து அணல் ஊன்றிக் கண்ணீர் கவுள் அலைப்பக்
கண்ணீர் கவுள் அலைப்பக் கையற்று யாம் இனையப்
புண் ஈரும் வேலின் புகுந்ததால் மாலை

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments