Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 2051 - 2055 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2051 – 2055 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2051 – 2055 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2051. அவிழ்ந்து ஏந்து பூங் கோதை ஆகத்து அலர்ந்த
முகிழ்ந்து ஏந்து இளமுலை மேல் பொன் பசலை பூப்பப்
பொன் பசலை பூப்பப் பொருகயல் கண் முத்து அரும்ப
அன்பு உருகும் நெஞ்சம் அழுங்குவிக்கும் மாலை

விளக்கவுரை :

2052. பாடினான் தேவ கீதம் பண்ணினுக்கு அரசன் பாடச்
சூடக மகளிர் சோர்ந்து செருக்கிய மஞ்ஞை ஒத்தார்
ஆடகச் செம் பொன் பாவை அந்தணன் புகழ்ந்து செம் பொன்
மாடம் புக்கு அநங்கன் பேணி வரம் கொள்வல் நாளை என்றாள்

விளக்கவுரை :

[ads-post]

2053. மடல் அணி பெண்ணை ஈன்ற மணிமருள் குரும்பை மான
உடல் அணி ஆவி நைய உருத்து எழும் முலையினாளும்
அடல் அணி தோழிமாரும் ஆர்வத்தில் கழும இப்பால்
கடல் அணி திலகம் போலக் கதிர் திரை முளைத்தது அன்றே

விளக்கவுரை :

2054. பொன் இயல் மணியும் தாரும் கண்ணியும் புனைந்து செம் பொன்
மின் இயல் பட்டம் சேர்த்தி ஆன் நெய் பால் வெறுப்ப ஊட்டி
மன் இயல் பாண்டில் பண்ணி மடந்தை கோல் கொள்ள வையம்
இன் இயல் பாவை ஏற்பத் தோழியோடு ஏறினாளே

விளக்கவுரை :

2055. ஆடவர் இரிய ஏகி அம் சொல்லார் சூழக் காமன்
மாடத்துள் இழிந்து மற்று அவ் வள்ளலை மறைய வைத்துச்
சூடு அமை மாலை சாந்தம் விளக்கொடு தூபம் ஏந்திச்
சேடியர் தொழுது நிற்பத் திருமகள் பரவும் அன்றே

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments