Homeசீத்தலைச் சாத்தனார்மணிமேகலை 4661 - 4680 of 4856 அடிகள்

மணிமேகலை 4661 – 4680 of 4856 அடிகள்

மணிமேகலை 4661 – 4680 of 4856 அடிகள் 

manimegalai

4661. சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப்
பத்து வகையால் பயன் தெரி புலவர்
இத் திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவர்
“நல்வினை என்பது யாது?” என வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
சீலம் தாங்கித் தானம் தலைநின்று

விளக்கவுரை :

[ads-post]

4671. மேல் என வகுத்த ஒருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்
உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின்
புரிவு இன்றாகிப் புலன் கொளாததுவே
அருஉரு என்பது அவ் உணர்வு சார்ந்த
உயிரும் உடம்பும் ஆகும் என்ப
வாயில் ஆறும் ஆயுங்காலை
உள்ளம் உறுவிக்க உறும் இடன் ஆகும்
ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments