Homeசீத்தலைச் சாத்தனார்மணிமேகலை 4721 - 4740 of 4856 அடிகள்

மணிமேகலை 4721 – 4740 of 4856 அடிகள்

மணிமேகலை 4721 – 4740 of 4856 அடிகள் 

manimegalai

4721. தோற்றம் மீளும் தோற்றம் மீளப்
பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்புச்
சாக்காடு அவலம் அரற்றுக் கவலை
கையாறு என்று இக் கடை இல் துன்பம்
எல்லாம் மீளும் இவ் வகையால் மீட்சி
ஆதிக் கண்டம் ஆகும் என்ப
பேதைமை செய்கை என்று இவை இரண்டும்
காரண வகைய ஆதலானே
இரண்டாம் கண்டம் ஆகும் என்ப
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே

விளக்கவுரை :

[ads-post]

4731. நுகர்ச்சி என்று நோக்கப்படுவன
முன்னவற்று இயல்பான் துன்னிய ஆதலின்
மூன்றாம் கண்டம் வேட்கை பற்று
கரும ஈட்டம் எனக் கட்டுரைப்பவை
மற்று அப் பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள்
குற்றமும் வினையும் ஆகலானே
நான்காம் கண்டம் பிறப்பே பிணியே
மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம்
என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின்
பிறப்பின் முதல் உணர்வு ஆதிச் சந்தி

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments