HomeUncategorizedகடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு 11 - 15 of 35 பாடல்கள்

கடுவெளிச் சித்தர் – ஆனந்தக் களிப்பு 11 – 15 of 35 பாடல்கள்

கடுவெளிச் சித்தர் – ஆனந்தக்
களிப்பு
11 – 15 of 35 பாடல்கள்
11. மெஞ்ஞானப் பாதையி லேறு – சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு – உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு.
விளக்கவுரை :
12. மெய்குரு சொற்கட வாதே – நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே – நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே.
விளக்கவுரை :
13. கூடவருவ தொன்றில்லை – புழுக்
கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை – அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை.
விளக்கவுரை :
14. ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு – இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு – அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு.
விளக்கவுரை :
15. உள்ளாக நால்வகைக் கோட்டை – பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை –
வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம்
வீட்டை.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments