கடுவெளிச் சித்தர் – ஆனந்தக்
களிப்பு 6 – 10 of 35 பாடல்கள்
களிப்பு 6 – 10 of 35 பாடல்கள்
6. தூடண மாகச்சொல் லாதே – தேடுஞ்
சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
ஏடாணை மூன்றும் பொல்லாதே – சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே.
விளக்கவுரை :
7. நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்
கொண்டாடு.
கொண்டாடு.
விளக்கவுரை :
8. நல்லவர் தம்மைத் தள்ளாதே – அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள்
ளாதே
ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே –
கெட்ட
கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த
விள்ளாதே.
விள்ளாதே.
விளக்கவுரை :
9. வேத விதிப்படி நில்லு – நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு – பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக்
கொல்லு.
கொல்லு.
விளக்கவுரை :
10. பிச்சையென் றொன்றுங்கே ளாதே – எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே – சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே.
விளக்கவுரை :




