Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 1771 - 1800 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1771 – 1800 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1771 – 1800 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

பின்னேநீ ரெங்களையும் பிறவிசெய்ய வேண்டாங்காண்
எந்நேரங் கயிலை இப்பூமி யானதிலே
தெய்வப் பசுப்போல் தேவரீ ரெங்களையும்
மெய்யறிவு கூடி மிகப்புடையு மேலோனே
அல்லாதே போனால் அடியார்க ளெங்களையும்
இல்லாதே செய்யும் இனிப்பிறவி வேண்டாங்காண்
அம்மை உமையாள் அருகே மிகஇருந்து
உம்மையும் போற்றி உம்மூழி யங்கள்செய்து
பூவுலகில் நாங்கள் பெண்ணாய்ப் பிறந்ததுண்டால்
பாவிகட்கு வேலைப் பண்ணி முடியாதே
பூவு முடித்துப் பூமேடை யும்பெருக்கி
நாவுலகு மெய்க்க நல்லகவி தான்பாடி
தம்புரு வீணை சப்தக் குழலுடனே
இன்புருக ராகம் இசைந்தமுறை தானிகழ்த்தி
நரசென்மம் வாழும் நசுரக் குலங்களிலே
அரசேநீ ரெங்களையும் அழுந்தப் படையாதேயும்
இப்படியே கன்னி இரங்கி யழுதிடவே
அப்படியே கன்னி அவர்களுக் காதியுந்தான்
சொல்லுவார் வேதச் சுடரோ னதிசயித்து
நல்லதுகாண் பெண்ணே நம்மைரண்டுஞ் சொல்லாதே
மாயன் துவாபர வையகத்தில் போய்ப்பிறக்க
வாயமிட்டா ருங்களையும் மாதா வெனவாக்க
நாமென்ன செய்வோம் நவ்விமால் செய்ததற்குப்
போமென் னஈசர் பிறவிசெய்தா ரம்மானை
வாயு மகாதேவன் வடிவென்ற இச்சையினால்
பாசமுறவாட பைங்கிளியே உங்களுக்கு
ஆசையா லுங்களுக்கு அவனே புருஷனென்றார்
சங்கு சரங்கொண்ட தம்பியென்ற இச்சையினால்
அங்குப் பகவதியும் அச்சுதரு முங்களுக்கு
மதலையென வந்துதிப்பார் வையமது கொண்டாட

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments