Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 13141 - 13170 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 13141 – 13170 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 13141 – 13170 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சரணம்

பெற்றநா ளின்றுவரைப் பிள்ளைதனைக் காணாமலே
மெத்தம னதுநொந்து மெய்யந்த ளருதையோ (மதலை)

வாலைப்ப ருவத்திலே வனத்தில்ம யக்கமிட்டுக்
கோலம ழித்தவேத கோலகால மாமுனியே (மதலை)

பாலர்பெற்ற நாள்முதலாய்ப் பன்னிரண்டு ஆண்டுவரைக்
காலதி ழகாமலே காட்டில்த வசிருந்தோம் (மதலை)

ஊணுஉ றக்கமில்லை ஒருவரின் தஞ்சமில்லை
மூணுநாலு காலம்வரை மூண்டத்த வசிருந்தோம் (மதலை)

சிங்கங்க ரடிபுலி திரியும்வ னத்தினூடே
நங்கைமா ரேழ்பேரும் நாடித்த வசிருந்தோம் (மதலை)

இத்தனைநா ளுந்தவ மிருந்துபின் னாங்களெல்லாம்
பெற்றன மனுவயிற்றில் பிறந்துவு தித்துவந்தோம் (மதலை)

முன்னிருந்த செல்வமென்ன மூதூர்சி றப்புமென்ன
மன்னுகந்த மாதுமையை மறந்துக லியில்வந்தோம் (மதலை)

ஆண்டச்சி றப்புமென்ன அருஞ்சுனை யாடலென்ன
காண்டம்நிறை வேறுதற்கோ கலியிலு தித்துவந்தோம் (மதலை)

உண்டிருந்த செல்வமென்ன உடுத்ததுகில் ஞாயமென்ன
கொண்டிருந்த விதிப்பயனோ கூறுகலி மீதில்வந்தோம் (மதலை)

பொன்னும்பந்தலாரமென்ன பூத்தொடுக்கும் சாரமென்ன
முன்னுரைத்து விட்டதுபோல் மூண்டகலி மிதில்வந்தோம் (மதலை)

பந்தடிக்கும்வீரமென்ன பைம்பொன்னிறமேடையென்ன
குந்தடிக்கமாவுலகில் குதித்துப் பிறந்துவந்தோம் (மதலை)

கன்னிய ழியுமன்னே காதல்தனைப் பெற்றதினால்
நின்னுபிள்ளைப் பாராமலே நெடுகந டந்துவிட்டோம் (மதலை)

கண்டுபிள்ளைத் தானெடுத்துக் கமலமுகத் தோடணைத்துப்
பெண்டேழும் பால்கொடாமல் பெருகவ னத்தில்சென்றோம் (மதலை)

பாலிளகி நல்லமிர்தம் பாலாய்ச்சொ ரியுதையோ
மாலழகா எங்களுட மனக்கவ லையைத்தீர்க்க (மதலை)

வர்ணநி றமதுவும் மக்களுட சாயலதும்
கண்ணதிலே கண்டறியோம் கையதிலே தாருமையா (மதலை)

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments