HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 9701 - 9750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9701 – 9750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9701 – 9750 மூலிகைச் சரக்குகள்

பாரையுப்புக்கோரை – உப்பங்கோரை
பார்ச்சாகிகவறுகு – வெள்ளறுகுச் செடி
பார்ச்சிகைப் பூடு – மயிற்சிகைப் பூடு
பார்ப்பைமரம் – பரம்பைமரம்
பார்வணக்கள்ளி – மான்செவிக்கள்ளி
பார்வதமரிசி – வாலுளுவையரிசி
பார்வதாதிகவிருட்சம் – சோதிவிருட்சம்
பார்வதிக்கொடி – தாளிக்கொடி
பார்வதிமரம் – ஆத்திமரம்
பாலகம் – கோட்டம்
பாலகனச்செடி – காரைச்செடி
பாலஸ்மச்செடி – சீமைச்செடி
பாலடைக்கொடி – சித்திரப்பாலாடைக் கொடி
பாலதனயமரம் – கருங்காலிமரம்
பாலதிக்கற்றாழை – சோற்றுக்கற்றாழை
பாலமுடாங்கிக்கொடி – வேலிப்பருத்திக் கொடி
பாலரசம் – சூதகம்
பாலாட்டங்கொடி – ஆட்டாங்கொடி
பாலாந்தெள்ளுக் கொடி – இனங்கீலகக் கொடி
பாலிகைச்செடி – அடம்புச் செடி
பாலிதமரம் – தேக்குமரம்
பாலிமரம் – ஆலமரம்
பாலிருளிமரம் – வெள்ளிருள்மரம்
பாலிவிக்கிழங்கு – சருக்கரைவள்ளிக் கிழங்கு
பாலிறுவிமரம் – முறுக்குமரம்
பாலினிவிருட்சம் – முண்டக விருட்சம்
பாலின் மூன்றாந் தம்பி – வெண்ணெய், நெய்
பாலுகவள்ளிச்செடி – கற்பூரவள்ளிச்செடி
பாலூகமரம் – குடைவேலாமரம்
பாலைமரம் – வெப்பாலைமரம்
பாலைமாருதக்கொடி – பிரண்டைக்கொடி
பாலொடுவி – கொடிப்பாலை
பால்கண்டிதமரம் – பாற்கடுக்காய் மரம்
பால்நீர்முள்ளி – வெள்ளைநீர் முள்ளிச்செடி
பால்பாச்சான்கள்ளி மரம் – மரக்கள்ளி
பால்புங்கு – காட்டுப்புங்குமரம்
பால்மரம் – கள்ளிமரம் , ஆலமரம்
பால்முறிந்தநீர் – செயநீர்
பால்வதிமரம் – அனிச்சமரம்
பால்வள்ளிக் கிழங்கு – சருக்கரைவள்ளிக் கிழங்கு
பாவட்டைச்செடி – சிவப்புப்பாவட்டைச் செடி
பாவாடைப்பூ – இலுப்பைப்பூ
பாற்கடுக்காய் – செங்கடுக்காய்
பாற்காசிச்செடி – பொன்னூமத்தைச் செடி
பாற்காயம் – பெருங்காயம்
பாற்குழம்பமரம் – பாலொடுவை மரம்
பாற்குறண்டி – காய்க் குறண்டிச் செடி
பாற்கொழுஞ்சி – கொழுஞ்சிச்செடி
பாற்சாதமரம் – சொரி வழுக்கைமரம்
பாற்சாதம் – அமுதுச்சாதம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments