சித்த வைத்திய அகராதி 1101 – 1150 மூலிகைச் சரக்குகள்
ஆகுவாகனன்மெச்சுமிலை – வில்வம்
ஆகேவகமுள்ளிச்சசெடி – பேய் முள்ளிச்செடி
ஆகேறுமரம் – கொன்றைமரம்
ஆங்கிரிவு – சுக்கிலம்
ஆசாசிக்கொடி – சீந்திற்கொடி
ஆகாநங்கை – ஆதளைச்செடி
ஆசியசீரகம் – கருஞ்சீரகம்
ஆசியசூதப்புல் – பேய்வரகு
ஆசியபத்திரக்கொடி – தாமரை
ஆசியபோதமரம் – பேய்வாதுமை
ஆசினிமரம் – ஈரப்பலாமரம்
ஆசுக்காயம் – பேய்வெங்காயம்
ஆசுணமரம் – அசோகுமரம்
ஆசுபத்திராமரம் – அகச்சூலி
ஆசுரப்பூடு – வெள்ளைப்பூடு
ஆசுரம் – இஞ்சி
ஆசுராகிதக்காய் – பேரிக்காய்
ஆச்சமாகப்புல் – மூகைப்புல்
ஆச்சமாதிகக்கொடி – மலைவெற்றிலைக்கொடி
ஆச்சாசினிமரம் – ஆச்சாமரம்
ஆச்சாசோபிகச்செடி – மஞ்சட் கிலுகிலுப்பைச்செடி
ஆச்சாமரம் – ஈன்மரம்
ஆச்சுகாசிமரம் – மஞ்சட்கோங்கு
ஆச்சுவரிமரம் – அரசமரம்
ஆஞ்சரிணச்செடி – காட்டுத்துளசி
ஆஞ்சிச்செடி – ஏலச்செடி
ஆஞ்சித்தாழைமரம் – மஞ்சட் தாழைமரம்
ஆஞ்சிறிகச்செடி – சங்குச்செடி
ஆடகக்குடோரிமரம் – மயிலாடுங் குருந்துமரம்
ஆடகச்செடி – துவரைச்செடி
ஆடகத்திப்பாஷாணம் – குங்கும பாஷாணம்
ஆடகமரம் – துவரைமரம்
ஆடகாவிகமரம் – மரவுரிமரம்
ஆடமணக்குச்செடி – ஆமணக்கு
ஆடமாகிதச்செடி – மலைச்செந்தொட்டிச்செடி
ஆடலைமரம் – அரசமரம்
ஆடாதோடைச் செடி – கவீரகம்
ஆடியகூத்தன்மரம் – தில்லைமரம்
ஆடுதின்னாப்பாளை – பங்கம்பாளை
ஆடைக்காதிமரம் – மலைப்பருத்தி
ஆடையொட்டிச்செடி – ஒட்டுச்செடி
ஆடையொட்டிநீர் – சுக்கிலம்
ஆட்கொல்லிமரம் – தில்லைமரம்
ஆட்கொல்லிவிரை – தில்லம்விரை
ஆட்டாங்கள்ளி – திருகுகள்ளி
ஆட்டாங்கொறுக்கு மரம் – மலைத்துவரை மரம்
ஆட்டாங்கோரைப்புல் – சிறுகோரைப் புல்
ஆட்டினிமரம் – மலைப்பூவரசமரம்
ஆட்டுக்கால்செடி – அடம்பு
ஆட்டுச்சக்கரணிமரம் – மலை யரளி




