HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 10351 - 10400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10351 – 10400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10351 – 10400 மூலிகைச் சரக்குகள்

பெரியநங்கைச்செடி – பிரியாநங்கைச்செடி
பெரியம்மான் பச்சரிசி – பெருஞ்சித்திரப்பாலாடைக்கொடி
பெரியவுரி – வண்ணானவுரி
பெரியாணங்கைநீர் – குடநீர், ருதுநீர், சிறுநீர்
பெரியாதளைச்செடி – காட்டாமணக்குச்செடி
பெரியாதீதக்கொடி – பெருமருந்துக்கொடி
பெரியநங்கை – மிளகாய்நங்கைச் செடி
பெரியானாதிக்காய் – தானிக்காய்
பெரியோருண்ணுங் கற்பம் – கஞ்சாயிலை
பெருக்கி – நாதம் – விந்து
பெருங்கடுக்காய் – கப்பற்கடுக்காய்
பெருங்கடிச்சித்தாழை – தழுதாழை
பெருங்கட்டுக்கொடி – நீர்க்கட்டுக்கொடி
பெருங்கத்தாரிப்பட்டை – செங்கத்தாரிப்பட்டை
பெருங்கத்திரிக்காய் – பெரும்வழுதலைக்காய்
பெருங்கததுகப்புல் – தருப்பைப்புல்
பெருங்கரணைக்கிழங்கு – சேனைக் கிழங்கு
பெருங்களாமரம் – களாமரம்
பெருங்கற்றாதிமரம் – தாளிப்பனை
பெருங்கற்றாழை – கருங்கற்றாழை
பெருங்காகிரிக்கொடி – தாளிக்கொடி
பெருங்காகோளி – காகோளி
பெருங்காக்கணத்தி – காட்டுக்காக்கணத்தி
பெருங்காஞ்சொரி – பெருஞ் செந்தொட்டிச்செடி
பெருங்காமிகப் பத்திரி – தாளிசப்பத்திரி
பெருங்காயம் – பாற்காயம்
பெருங்காயம்நாறிமரம் – பெருங்காய்ப்பால் மரம்
பெருங்காரகப்பூடு – திகைப்பூடு
பெருங்காராமணி – பெரிய காராமணிப்பயறு
பெருங்காரைச்செடி – வனக்காரைச்செடி
பெரியாதீதக்கொடி – பெருமருந்துக்கொடி
பெரியநங்கை – மிளகாய்நங்கைச்செடி
பெரியானாதிக்காய் – தானிக்காய்
பெரியோருண்ணுங்கற்பம் – கஞ்சாயிலை
பெருக்கி – நாதம், விந்து
பெருங்காரைமரம் – மதுக்காரைமரம்
பெருங்காலிப்பூச்சி – திகைப்பூடுப்பூச்சி
பெருங்காளான் – காளான்
பெருங்கானச்செடி – பேய்த்தும்பைச்செடி
பெருங்கிழங்கு – பறங்கிக்கிழங்க
பெருங்கீரிப்பூண்டு – கீரிப்பூண்டு
பெருங்குமிழ்மரம் – குமிழ்மரம்
பெருங்குருக்கிழங்கு – மருட்கிழங்கு
பெருங்குரும்பை – மதுக்குரும்பை
பெருங்குலிகச்செடி – தகரைச்செடி
பெருங்குறட்டைக்கொடி – குறட்டைக்கொடி
பெருங்குறிஞ்சா – நறுங்குறிஞ்சாச்செடி
பெருங்குறுந்தொட்டி – செங்குறுந்தொட்டிச்செடி
பெருங்குறுந்தோதிகமரம் – குருந்தமரம்
பெருங்குன்றி மணி – யானைக்குன்றிமணி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments