HomeUncategorizedசிவவாக்கியம் 66 - 70 of 525 பாடல்கள்

சிவவாக்கியம் 66 – 70 of 525 பாடல்கள்


சிவவாக்கியம் 66 – 70 of 525
பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

66.
கழுத்தையும் நிமிர்த்திநல்ல
கண்ணையும் விழித்துநீர்
பழுத்துவாய் விழிந்துபோன பாவம் என்னபாவமே?
அழுத்தமான வித்திலே அனாதியான இருப்பதோர்
எழுத்திலா எனழுத்திலோ இருக்கலாம் இருந்துமே.
விளக்கவுரை :
67.
கண்டுநின்ற மாயையும்
கலந்துநின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லீரேல்
பண்டைஆறும் ஒன்றுமாய்ப் பயந்தவேத சுத்தனாய்
அண்டமுத்தி ஆகிநின்ற ஆதிமூலம் மூலமே!
விளக்கவுரை :

[ads-post]

68.
ஈன்றவாச லுக்குஇரங்கி
எண்ணிறந்து போவீர்காள்!
கான்றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான்றவாச லைத்திறந்து நாடிநோக்க வல்லீரேல்,
தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே.
விளக்கவுரை :
69.
உழலும்வாச லுக்குஇரங்கி ஊசலாடும்
ஊமைகாள்
?
உழலும்வாச லைத்திறந்து உண்மைசேர எண்ணிலீர்?
உழலும்வாச லைத்திறந்து உண்மைநீர் உணர்ந்தபின்
உழலும்வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே.
விளக்கவுரை :
70.
மூலநாடி தன்னிலே
முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments