HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 1851 - 1900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1851 – 1900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1851 – 1900 மூலிகைச் சரக்குகள்

இலைமுலைமாதுக்கொடி – தூதுவளை
இல்லகமரம் – தேற்றாமரம்
இல்லடைப்புல் – முயற்புல்
இல்லிகக்கீரை – சிறுகீரை
இல்லிகம் – வால்மிளகு
இல்லிமரம் – தேற்றாமரம்
இல்லேகக்கொடி – முப்பிரண்டை
இவைநாகிதம் – மிளகு
இழுவைச்செடி – பூனைமுட்செடி
இளசாட்சகமரம் – கொன்றை
இளஞ்சாலவமரம் – சிவப்புசித்தகத்திமரம்
இளஞ்சிச்செடி – ஆவரைச்செடி
இளஞ்சிதச்செடி – ஊசிமுல்லை
இளஞ்சினிச்செடி – அவுரிச்செடி
இளஞ்சீவிதக்காய் – ஊறுகாய்
இளநீர்க்காய் – தெங்கிளநீர்க்காய்
இளந்தண்டுக்கீரை – முளைக்கீரை
இளந்தோகைச்செடி – சிவப்புப் பொன்னாங்கன்னிச்செடி
இளம்புல்லுறுகு – அறுகு
இளவந்திகை – சிறுகட்டுக்கொடி
இறஞ்சிச்செடி – அவுரிச்செடி
இறஞ்சிதச்சேம்புச்செடி – கருஞ்சேம்புச்செடி
இறந்திரிமரம் – இத்திமரம்
இறலாகிகச்செடி – எரிமூலிகை
இறலிமரம் – மருதுமரம்
இறுகண்ணியம் – கருடன்கொடி
இறுகாவகச்செடி – கையான் தகரைச்செடி
இறுகானகிச்செடி – கெளரியச்சஞ்செடி
இறுங்குச்சோளம் – காக்காய்ச் சோளம்
இறுசிகமரம் – எட்டி
இறுசுவசற்பாட்சி – சற்பாட்சி
இறுதாதிகக்கொடி – கேந்திரவல்லிக்கொடி
இறுநாகவேர் – இலாமிச்சைவேர்
இறுமாப்புக்கொடி – கும்பச்சுரை
இறும்புகக்கொடி – தாமரை
இறும்புகாப்பூ – கார்த்திகைப்பூ
இறும்புநீத்திச்செடி – எருக்கிலை
இறைகூத்தன்மரம் – குராமரம்
இறைமாமரம் – மாமரம்
இறையாமணக்கு – செவ்வாமணக்குச்செடி
இறைவனிம்பச்செடி – சிவனார்வேம்புச்செடி
இனிப்பிலந்தைமரம் – இலந்தை
இனிப்பிலாதிதமரம் – கமுகுமரம்
இனிப்புகொடிமாதளை – கொடிமாதளை
இனிப்புக்கொடி முங்கிகம் – கொடி நெல்லி
இனிப்புக்கொடிமுந்திரி – கொடி முந்திரி
இனிப்புத்தட்டை – இராமக்கரும்புத்தட்டை
இனிப்புநவ்வல்மரம் – நவ்வல்மரம்
இனிப்புநாகப்பழம் – நவ்வல்பழம்
இனிப்புநாரத்தைமரம் – கொடிநாரத்தை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments