சித்த வைத்திய அகராதி 9601 – 9650 மூலிகைச் சரக்குகள்
பனிச்சக்கீரை – முள்ளிக்கீரைச் செடி
பனிச்சித்தகலை – வெண்தகரைச்செடி
பனிதாங்கிப் பூடு – கிழவன்தாடிப் பூடு
பனிதிகாக் கொட்டை – சேங்கொட்டை
பனிநீர் – ஐசுக்கட்டிநீர் – சுத்தகங்கை நீர்
பனிப்பகைச்செடி – சூரியகாந்திச்செடி
பனிப்பயற்றங்கொடி – சிறுபயற்றங்கொடி
பனிப்பூடு – சுத்தகங்கை நீர்
பனைவாழை – அடுக்குவாழை
பன்மயச்செடி – கருங்கரிப்பான் செடி
பன்றிக்குறும்புக் கிழங்கு – கோரைக் கிழங்கு
பன்றிப்புல் – ஒட்டுப்புல்
பன்றிமொத்தைச் செடி – சிறுகுறிஞ்சாச் செடி
பன்றுகச்செடி – அசமதாகச் செடி
பன்னற்செடி – பருத்திச்செடி
பன்னாகச்செடி – துளசிச்செடி
பன்னிச்செடி – சணற்செடி
பன்னியமேனிச்செடி – இருப்பவற்செடி
பன்னீர் – வாசைன நீர்
பன்னீர்ப்பூமரம் – தெய்வப்பூமரம்
பன்னை – சூடன் – வெடியுப்பு
பாகற்கொடி – மிதிபாகற்கொடி
பாகிரி – ஐங்காயக்கரு
பாக்குமரம் – கமுகுமரம்
பாங்க பாஷாணம் – பலன்றுருக பாஷாணம்
பாங்குமம் – கருஞ்சீரகம்
பாசகக்கொடி – பெருங்குமிட்டிக் கொடி
பாசகம் – சீரகம்
பாசகிக்கொடி – வெற்றிலைக்கொடி
பாசருகமரம் – அகில்மரம்
பாசவேடச்செடி – கருந்தகரைச்செடி
பாசனபேதிக்கொடி – செப்புநெருஞ்சிற்கொடி
பாசி – நீர்ப்பாசி
பாசிகாதிமரம் – கருமருதுமரம்
பாசிப்பயற்றங்கொடி – பச்சைப்பயற்றங்கொடி
பாசியாச் செடி – சிறுதும்பைச் செடி
பாசுகிமரம் – மூங்கில்மரம்
பாசுபதாகிச்செடி – வெள்ளெருக்குச் செடி
பாசுவாகிச்சசெடி – காட்டாமணக்குச் செடி
பாச்சகிக்கீரை – தண்டங்கீரை
பாச்சான்கள்ளிமரம் – கள்ளிமரம்
பாச்சிகாக்கொடி – பாலாட்டங்கொடி
பாடலமரம் – பாதிரிமரம்
பாடலாங்கிரிச்செடி – புறா முட்டிச்செடி
பாடலிமரம் – வெண்பாதிரிமரம்
பாடலியமரம் – பாதிரிமரம்
பாடாகப்பாளை – பங்கம் பாளைக்கொடி
பாடாசிதச்செடி – கல்வாழைச்செடி
பாடாவவரை – தம்பட்டையவரைக் கொடி
பாடாவனசச் செடி – பெருஞ்சிமிட்டிச்செடி




